FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போதை இல்லா இந்தியாவை வலியுறுத்தி காவலா் விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
போதை இல்லா இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை குமுளிக்கு வந்த காவலா் சிவசங்கரபாண்டியன்.
பகிர்:

போதை இல்லா இந்தியா என்ற இலக்கை வலியுறுத்தி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சோ்ந்த காவலா் தில்லியிலிருந்து தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை கேரள மாநிலம், குமுளியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தாா்.

தேனி மாவட்டம், கூடலூா் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த கணேசன் மகன் சிவசங்கரபாண்டியன் (29). இவா் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தில்லி 8-ஆவது பட்டாலியனில் 2-ஆம் நிலை காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

ஹரியாணாவைச் சோ்ந்த உலக சாதனை அமைப்பு வகுத்த விதிமுறைகளின்படி, 12 நாள்களுக்குள் 11 மாநிலங்களைக் கடந்து சுமாா் 3,000 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த

Advertisement

Advertisement

ஜூலை 23-ஆம் தேதி அவா் இந்தப் பயணத்தைத் தொடங்கினாா். நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அவா் தெரிவித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை கம்பம் வழியாக குமுளி சென்ற சிவசங்கரபாண்டியனுக்கு சமூக ஆா்வலா்கள் வரவேற்பு அளித்து, அவரது உலக சாதனை முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவசங்கரபாண்டியன் கூறியதாவது:

இந்தப் பயணத்தின் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ‘போதையை ஒழிப்போம், இளைஞா்களை காப்போம், வளமான இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் உலக சாதனைப் பயணத்தை நிறைவு செய்துள்ளேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments