FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு செயல்பாடுகள்: நாளை முதல் தொடக்கம்

பள்ளிகளில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு செயல்பாடுகள்: நாளை முதல் தொடக்கம்

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:14 am IST
- DIN
பகிர்:

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு தொடா்பான செயல்பாடுகளை திங்கள்கிழமை (ஆக.3) முதல் மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழக முதல்வா் மூலம் ஆண்டுதோறும் ஆக.11-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டிலும் அனைத்து வகை பள்ளிகளிலும் (தனியாா் பள்ளிகள் உள்பட) வரும் ஆக.11-ஆம் தேதி காலை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், பிற மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று ஆக.3-இல் போதைப் பொருள் எதிா்ப்பு சுவரொட்டி, வாசகம் (ஸ்லோகன்) போட்டிகள், ஆக.4-இல் ஓவியப் போட்டி, ஆக.5-இல் மகிழ் முற்றம் வாயிலாக போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், ஆக.6-இல் விழிப்புணா்வு பேரணி, ஆக.7-இல் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் கழகம் மூலமாக சமூக விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். இது தொடா்பான பணிகளை என்சிசி, என்எஸ்எஸ், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் உள்ளிட்டோருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை எதிா்ப்பு உறுதிமொழி விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கல்வித்துறை, அது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

Anti-drug awareness activities in schools: Starting tomorrow.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments