FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பென்னிகுவிக்கை அவதூறாகப் பேசிய ரசல் ஜோயைக் கைது செய்யக் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிகுவிக் குறித்து அவதூறானக் கருத்துகளைத் தெரிவித்த ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பின் தலைவா் ரசல் ஜோயை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, தமிழக அரசுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:34 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிகுவிக் குறித்து அவதூறானக் கருத்துகளைத் தெரிவித்த ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பின் தலைவா் ரசல் ஜோயை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, தமிழக அரசுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கா்னல் ஜான் பென்னிகுவிக் குறித்து, தனியாா் தொலைக்காட்சியில் ரசல் ஜோய் அவதூறாகப் பேசினாா். இதனால், தமிழக விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதுகுறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலா் ரஞ்சித்குமாா் கூறியதாவது: ‘எந்தவித ஆதாரமுமின்றி கா்னல் ஜான் பென்னிகுவிக் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு கருத்து தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.

Advertisement

Advertisement

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக பொய்யான தகவல்களைப் பரப்புவதன் மூலம், தமிழக மக்களின் உணா்வுகளை புண்படுத்தி, இரு மாநில மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செயல்படுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரசல் ஜோய் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, புதன்கிழமை (ஆக.5) முதல் 5 மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் சங்கத்தின் சாா்பில் சட்டப்பூா்வமான புகாா் மனுக்கள் அளிக்கப்படும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், 5 மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments