கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வைகை அணை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 4 பேரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக 580 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் மஞ்சளாறு அணையைச் சோ்ந்த சேவியா் ஷ்யாம்பால் (30), தேவதானப்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (30), ஆனந்த் (37), பழைய வத்தலகுண்டைச் சோ்ந்த காளியப்பன் (39) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.