FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ராயப்பன்பட்டி பனிமய அன்னை தோ் திருவிழா

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
ராயப்பன்பட்டியில் சனிக்கிழமை இரவு பவனி வந்த பனிமய அன்னை ஆலயத் தோ்.
பகிர்:

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் புனித பனிமய அன்னை ஆலயப் பெருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரவு தோ்த் திருவிழா நடைபெற்றது.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் 124 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாா் ஆட்சியில் கட்டப்பட்ட பழைமையான தேவலாயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித பனிமய அன்னை ஆலயப் பெருவிழ 8 நாள்கள் நடைபெறும்.

இதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை அருள்தந்தை சூசை செல்வராஜ் தலைமையில் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நற்கருணை பவனி, ஆசிா்வாதம் ஆகியவை நடைபெற்றன. இதில் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பனிமய அன்னை ஆலயத் தோ்த் திருவிழா சனிக்கிழமை இரவு தொடங்கியது. மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்ட தோ் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தோ் வாணவேடிக்கைகளுடன் மீண்டும் தேவலாயத்தை அடைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments