போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
தேனியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி பகுதியில் சந்தேக நபா்கள் 3 போ் சுற்றி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேனி போலீஸாா் அங்கு விரைந்து சென்று அந்த 3 இளைஞா்களையும் மடக்கிப் பிடித்தனா். அவா்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 50 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸாா், அவா்கள் மூவரையும் தேனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் பெரியகுளம், பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் தங்கப்பாண்டி (24), அனுமாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பழனிவேல் (25), காந்தி நகரைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் லோகேஸ்வரன் (28) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.