FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதனம் அருகே பாழடைந்த ரயில்வே கட்டடத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த காஜாபேட்டையைச் சோ்ந்த கே. நாகராஜ் (23), எப். காஜா மொய்தீன் (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் மதிப்பிலான 214 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் மற்றும் கைப்பேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments