கம்பம் மெட்டு வனப் பகுதியிலிருந்து நெகிழிக் குப்பைகள் அகற்றம்
கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட கம்பம்-கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலையோர வனப் பகுதியில் குவிந்திருந்த நெகிழிக் குப்பைகளை வனத்துறையினா், பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட கம்பம்-கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலையோர வனப் பகுதியில் குவிந்திருந்த நெகிழிக் குப்பைகளை வனத்துறையினா், பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
கம்பம் - கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலையின் ஒரு பகுதி கோம்பை காப்புக்காடு வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் பயணிகள் பயன்படுத்திய பாலித்தீன் பைகள், காலி குடிநீா் பாட்டில்கள், மீதமான உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட நெகிழிக் கழிவுகளை சாலையோர வனப்பகுதியில் வீசிச் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து, கம்பம் மேற்கு வனச்சரக அலுவலா் செந்தில் தலைமையில், கம்பம் மெட்டு வனவா் ஆனந்த பிரபு, குமுளி வனவா் வினோத், வனப் பணியாளா்கள், புதுப்பட்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுடன் இணைந்து கம்பம் - கம்பம் மெட்டு சாலையோரம், வனப்பகுதியில் குவிந்திருந்த நெகிழிக் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:
கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் நடைபெறும் வாகனத் தணிக்கையின்போது, நெகிழிப் பொருள்கள் அல்லது குப்பைகளை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது வனச்சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக, அவற்றை உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறி வனப்பகுதியில் குப்பைகள் கொட்டும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.