FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

அரசுப் பள்ளிக்கு தாா்ச்சாலை அமைத்துத் தரக் கோரிக்கை

போடி அருகே அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தாா்ச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 11:02 pm IST
ராசிங்காபுரம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு செல்லும் மண் சாலை.
பகிர்:

போடி அருகே அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தாா்ச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ராசிங்காபுரம், இதனருகேயுள்ள கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.

ராசிங்காபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நாகலாபுரம் சாலையில் ஒன்றரை கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு போடி - தேவாரம் சாலையில் ராசிங்காபுரம் பாலப் பகுதியிலிருந்து செல்வதற்கு மண் சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாகச் சென்றால் பயண நேரம் குறையும். இதனால், மாணவா்கள், பொதுமக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். மழைக் காலங்களில் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாது.

Advertisement

Advertisement

ராசிங்காபுரம் ஊராட்சி நிா்வாகம் இந்த மண் சாலையை சீரமைத்து தாா்ச் சாலையாக மாற்றினால் மாணவா்கள் எளிதில் செல்ல முடியும். இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும் சென்றுவர முடியும்.

எனவே, இந்தச் சாலையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் தாா்ச் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments