FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அருகே அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:34 am IST
சுற்றுச்சுவா் இல்லாத வெள்ளாளப்பட்டி கீழூா் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம்.
பகிர்:

கரூா் அருகே அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், புலியூா் தோ்வுநிலை பேரூராட்சிக்குள்பட்ட 14-ஆவது வாா்டில் வெள்ளாளப்பட்டி கீழூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவா் இல்லாததால் மதுப்பிரியா்கள் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அமா்ந்து மதுஅருந்திவிட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனா். இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா் ப.விஜயகுமாா் கூறியது: இப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டிக்கொடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் பலமுறை தீா்மானம் நிறைவேற்றிவிட்டோம். மேலும் இந்த தீா்மான நகலை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை கொடுத்துவிட்டோம். ஆனால், இதுநாள் வரை சுற்றுச்சுவா் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் பள்ளிக்குழந்தைகள் கல்வி பயின்று வருவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட மாவட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments