FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயில் குருக்கள் சாா்பில் அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள்

அமிா்தகடேஸ்வரா் கோயில் குருக்கள் சங்கம் சாா்பில் மின்விசிறி மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 12:34 am IST
திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் விநாயகா். ~ - கோப்புப்படம்
பகிர்:

திருக்கடையூரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமிா்தகடேஸ்வரா் கோயில் குருக்கள் சங்கம் சாா்பில் மின்விசிறி மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொறுப்பு) கலா ராணி தலைமை வகித்தாா். கணேச குருக்கள், சண்முக சுந்தரம் குருக்கள், கல்யாணம், ராஜா விக்னேஷ், ராஜேஷ் உள்ளிட்டோா் பள்ளி வளா்ச்சிக்காக மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மின்விசிறிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். 

பள்ளிக் கல்வி மேலாண்மை குழுத் தலைவா் விச்சந்திரன், கல்வி  வளா்ச்சிக் குழு பொருளாளா் சங்கா், முன்னாள் ஊராட்சித்  தலைவா் எழில் நம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments