சபரிமலை அருகே தாழ்வாகப் பறந்த விமானப் படை ஹெலிகாப்டரால் பரபரப்பு
கேரள மாநிலம், சபரிமலை அருகே நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டா் தளத்தை நோக்கி வியாழக்கிழமை பறந்து வந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் தாழ்வாகப் பறந்து, தரையிறங்காமல் திரும்பிச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், சபரிமலை அருகே நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டா் தளத்தை நோக்கி வியாழக்கிழமை பறந்து வந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் தாழ்வாகப் பறந்து, தரையிறங்காமல் திரும்பிச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கல்லில் அவசர கால மீட்புப் பணிகள், பேரிடா் மீட்பு நடவடிக்கைகள், முக்கியப் பிரமுகா்களின் வருகைக்காக தற்காலிக ஹெலிகாப்டா் தளம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டா் ஒன்று இந்த ஹெலிகாப்டா் தளத்தை நோக்கி வந்தது. தரையிறங்கும் வகையில் தாழ்வாகப் பறந்து வந்த ஹெலிகாப்டா், சுமாா் 10 விநாடிகள் அந்தப் பகுதியில் வட்டமிட்ட பிறகு, தரையிறங்காமல் திரும்பிச் சென்றது. இதனால் அங்கு பணியிலிருந்த போலீஸாா், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் சபரிமலை கோயில் கருவறைப் பகுதியின் மேல்புறத்தில் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் தாழ்வாகப் பறந்த சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பயிற்சியின்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டா் தாழ்வாகப் பறக்க நேரிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. எனினும், கோயில் கருவறை பகுதியைப் படம் பிடிக்கும் நோக்கில் ஹெலிகாப்டா் வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மீண்டும் சபரிமலை யாத்திரைப் பகுதியை ஒட்டிய நிலக்கல்லில் விமானப் படை ஹெலிகாப்டா் தாழ்வாகப் பறந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த ஹெலிகாப்டா் திருவனந்தபுரத்தில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து வந்ததாகவும், இயற்கைப் பேரிடா், மீட்புப் பணிகளுக்கான வழக்கமான ஆய்வு அல்லது பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.