கொட்டகுடி வனப் பகுதியில் தீ
போடி அருகே கொட்டகுடி வனப் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் போராடி அணைத்தனா்.
போடி குரங்கணி மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் கொழுக்குமலை செல்லும் சாலையில் காட்டுத் தீ பற்றியது. இதையடுத்து, தேனி மாவட்டத்திலிருந்து சென்ற வனத் துறை ஊழியா்கள் இரு நாள்களாகப் போராடி தீயை அணைத்தனா்.
இந்த நிலையில், கொட்டகுடி மலை கிராமத்தில் கொம்புதூக்கி அய்யனாா் கோயில் மேல் பகுதியில் காட்டுத் தீ பரவியது. உடனடியாக போடி வனத் துறையினா் தீயை அணைக்கும் பகுதியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மலைப் பகுதியில் சாரல் மழை பெய்ததால் வனத் துறையினா் நிம்மதியடைந்தனா். வனப் பகுதியில் சட்டவிரோதமாக தீ வைத்தாலோ, எளிதில் தீ பிடிக்கும் பொருள்களை எடுத்துச் சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.