FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
கைது
பகிர்:

போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

போடி குலாலா்பாளையம் குண்டாலீசுவரி கோயில் அருகே போடி மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்த ராஜேஸ் (43) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனா். அவரிடமிருந்து 22 மதுப் புட்டிகள், ரூ.600 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments