FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சின்னமனூா் ஒன்றியம், சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 5:27 am IST
சீப்பாலக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவ முகாமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன்.
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இந்த முகாமில் கால்நடை வளா்ப்போா் பலா் தங்களது கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழக அரசு வழிகாட்டுதலின் பேரில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியத்தில் தலா 18 முகாம் என மொத்தம் 144 நடைபெற உள்ளது. இந்த முகாமை கால்நடை வளா்ப்பவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, சீப்பாலக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், அங்கன்வாடி மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments