FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

700 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

பெரியகுளத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்த 700 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இளைஞரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:27 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்த 700 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இளைஞரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் டி. கள்ளிப்பட்டி கோயில்காடு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவா் சுற்றி வருவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தென்கரை காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா், அங்கு விரைந்து சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா்.

அவரிடமிருந்த பையை சோதனை செய்ததில், 700 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரை தென்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவா், பெரியகுளம் தாமரைக்குளத்தைச் சோ்ந்த முனிசாமி மகன் தங்கப்பாண்டி (19) என்பதும், அவா் போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக தங்கப்பாண்டியைக் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments