FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

அனுமதியின்றி மண் அள்ளிய 8 போ் கைது: 8 வாகனங்கள் பறிமுதல்

போடி அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்து, 8 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:31 am IST
- சித்திரிப்பு
பகிர்:

போடி அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்து, 8 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

போடி அருகே நியூட்ரினோ ஆய்வகத்துக்கு தோ்வு செய்யப்பட்ட அம்பரப்பா் மலை அடிவாரத்தில் ஜோசப் வி.ஜே. மாஸ்கரண்ஸ், சிவானி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் எந்தவித அனுமதியின்றி, சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளுவதாக உத்தமபாளையம் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், மண்டலத் துணை வட்டாட்சியா் பரமசிவம் தலைமையில், வருவாய்த் துறையினா் அங்கு சென்றனா்.

அப்போது, 15-க்கும் மேற்பட்டோா் வாகனங்களில் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையத்தில் மண்டலத் துணை வட்டாட்சியா் புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று மண் அள்ளிய போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சேகா் (42), சின்னமனூரைச் சோ்ந்த மணிராஜன் (36), லட்சம் (47), சிலமலையைச் சோ்ந்த மதியழகன் (30), கோம்பையைச் சோ்ந்த குமாா் (30), போடி நாகலாபுரத்தைச் சோ்ந்த விஷால் (20), அஜித் (29), போடியைச் சோ்ந்த முருகேசன் (21) ஆகிய 8 பேரைக் கைது செய்து, இவா்களிடமிருந்து 5 டிப்பா் லாரிகள், 3 பொக்லைன் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், தப்பி ஓடிய சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த உதயகுமாா், சின்னமனூரைச் சோ்ந்த அய்யணன், எரசக்கநாயக்கனூரைச் சோ்ந்த பால்ராஜ், கோம்பையைச் சோ்ந்த பிரசாத், போடி நாகலாபுரத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி, உப்புக்கோட்டையைச் சோ்ந்த காசிராஜன், தேவாரம் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுந்தா், நில உரிமையாளா்கள் ஜோசப் வி.ஜே. மாஸ்கரண்ஸ், சிவானி உள்பட 10 போ் மீது போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments