FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்ற வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
பகிர்:

தேனி மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்ற வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் செல்வி (46). இவா் தனது வீட்டில் 10 கிலோ கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டாா். இதேபோல, தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த சடையாண்டியை (45) கொலை வழக்கில் அல்லிநகரம் போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ராஜேந்திரனை (51) கஞ்சா விற்ற வழக்கில் கம்பம் கிழக்கு போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்பேரில், செல்வி, சடையாண்டி, ராஜேந்திரன் ஆகிய மூவரையும் போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments