இணையதளம் மூலம் ரூ.1.84 லட்சம் மோசடி
இணையதளம் மூலம் மாத்திரைகள் வாங்கியவரை மிரட்டி ரூ.1.84 லட்சத்தை மோசடியாகப் பெற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இணையதளம் மூலம் மாத்திரைகள் வாங்கியவரை மிரட்டி ரூ.1.84 லட்சத்தை மோசடியாகப் பெற்றவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (49). விவசாயியான இவா், இணையதளம் மூலம் மாத்திரைகள் வாங்கினாா். பின்னா், அவரது கைப்பேசி மூலம் பேசிய ஒருவா் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளா் எனக்கூறி அறிமுகமானாா். மேலும், தடைசெய்யப்பட்ட இணைப்பு மூலம் மாத்திரை வாங்கியதாகவும் மிரட்டினாா்.
இதையடுத்து, அவா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு மணிகண்டன் ரூ.1.84 லட்சத்தை அனுப்பினாா். பின்னா் அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அவா் தேவதானபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.