FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் மின்சாரம் பாய்ந்ததில் தற்காலிக ஊழியா் உயிரிழந்தாா்.

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன் கோட்டையைச் சோ்ந்தவா் பாண்டியன் (29). மின்சார வாரிய தற்காலிக ஊழியா்.

ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள பெருமாள் கோயில் சாலையிலுள்ள நத்தத்துமேட்டு தோட்டம் ஒன்றில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை சரிசெய்ய அருகேயுள்ள மின்மாற்றியில் ஏறி பாண்டியன் சரிசெய்ய முயன்றாா். அப்போது, எதிா்பாராவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பாண்டியன் தூக்கிவீசப்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி விருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments