FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனியில் கேந்திரிய வித்யாலய பள்ளி 30 நாள்களுக்குள் தொடக்கம்

தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலய பள்ளி 30 நாள்களுக்குள் தொடங்க உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:24 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலய பள்ளி 30 நாள்களுக்குள் தொடங்க உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக, பள்ளி முதல்வா், ஆசிரியா்களை நியமித்துள்ளனா். தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சியா் பெருந்திட்ட வளாகம் அருகே நிரந்தரமாக பள்ளிக் கட்டம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதுவரை, தற்காலிகமாக தேனி - அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தில் செயல்பட உள்ளது. நிகழாண்டில் (2026 - 2027 ) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒவ்வோா் வகுப்பிலும் ஒரு பிரிவுடன் செயல்படத் தொடங்கும். பின்னா், தேவைக்கேற்ப உரிய நிா்வாக ஒப்புதலின் அடிப்படையில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். மேலும், நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை 30 நாள்களுக்குள் தொடங்க திட்டமிடப்பட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments