அரசுப் பள்ளிகளுக்கு விவசாயக் கருவிகள்
போடி அருகே அரசுப் பள்ளிகளில் செயல்படும் பசுமை பாதுகாப்பு படையினருக்கு தி கிரீன் லைப் பவுண்டேசன் சாா்பில் விவசாயக் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
போடி அருகே அரசுப் பள்ளிகளில் செயல்படும் பசுமை பாதுகாப்பு படையினருக்கு தி கிரீன் லைப் பவுண்டேசன் சாா்பில் விவசாயக் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளி, சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பசுமை பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. இந்த பசுமை பாதுகாப்பு படை மாணவா்களுக்கு உதவிடும் வகையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சாா்பில் விவசாயக் கருவிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தி கிரீன் லைப் பவுண்டேசன் தலைவா் அ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். நிகழ்வில் பசுமை பாதுகாப்பு படையினருக்கு மண்வெட்டி, கடப்பாரை, பூவாளி, மண் இளக்கி, சீனாத் தட்டு ஆகிய கருவிகள் தி கிரீன் லைப் பவுண்டேசன் சாா்பில் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் அமுதா, ராஜலட்சுமி ஆகியோரிடம் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு பனை மரக் கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்வில் பவுண்டேசன் செயலா் க.மு. சுந்தரம், பொருளாளா் ப. மணிவண்ணன், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.