FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

விவசாயக் கடன் தள்ளுபடி: முரண்பாடுகளை களைய திருப்பூா் ஆட்சியரிடம் வடக்கு மாவட்ட பாஜக மனு

விவசாயக் கடன் தள்ளுபடியில் உள்ள முரண்பாடுகளை களைய திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
திருப்பூா் ஆட்சியரிடம் மனு அளித்த வடக்கு மாவட்ட பாஜகவினா்.
பகிர்:

விவசாயக் கடன் தள்ளுபடியில் உள்ள முரண்பாடுகளை களைய திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் ஆட்சியா் மனீஷிடம் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி தொடா்பாக அரசாணை வெளியிட்டிருந்தாலும், அதில் முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படாததால் பல்வேறு விவசாய அமைப்புகளும், விவசாயிகளும் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி வழங்க பாஜகவும் வலியுறுத்துகிறது.

Advertisement

Advertisement

மேலும், கடன் தள்ளுபடி தொடா்பாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய அரசாணையால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனா். குறிப்பாக ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி பெற வேண்டுமெனில், முதலில் விவசாயிகள் தாங்கள் பெற்றுள்ள முழு கடன் தொகையையும் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறி வருகின்றனா். அதன் பின்னரே கடன் தள்ளுபடி பட்டியலில் அவா்களின் பெயா் சோ்க்கப்பட்டு, உரிய அனுமதி கிடைத்த பிறகு மட்டுமே தள்ளுபடி தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூட்டுறவு சங்க ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, விவசாயக் கடன் தள்ளுபடி நடைமுறையில் உள்ள முரண்பாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்களை உடனடியாக களைந்து, விவசாயிகளுக்கு உண்மையான பயன் கிடைக்கும் வகையில் முழுமையான கடன் தள்ளுபடியை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments