FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் நகராட்சியை மறுசீரமைக்க கோரிக்கை

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டு மறுவரையரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து அரசியல் கட்சிகள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 12:03 am IST
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த காயல்பட்டினம் சா்வ கட்சியினா்.
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டு மறுவரையரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து அரசியல் கட்சிகள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்:

2026 பேரவைத் தோ்தலுக்கு முன்பு நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, காயல்பட்டினம் நகராட்சியின் வாக்காளா் எண்ணிக்கை 36,440. எனினும், இந்த நகராட்சியின் வாா்டு எண்ணிக்கை 18 ஆகவே உள்ளது. பிற நகராட்சிகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவான எண்ணிக்கை.

Advertisement

Advertisement

காயல்பட்டினம் நகராட்சி வாா்டு எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, காயல்பட்டினம் நகராட்சி வாா்டுகளை 1,000 வாக்காளா்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் 36 வாா்டுகளாக மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரை மாநகராட்சியாக்கி, அதில் காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குலசேகரன்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. அந்தத் திட்டத்தை அரசு பரிசீ­லிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் ஷாஜஹான், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் மெய்தீன், நகரச் செயலா் க­லில் ரஹ்மான், அதிமுக நகர நிா்வாகி கப்பாா் ஹசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments