மகனைக் கொலை செய்த தந்தை உள்பட இருவா் கைது
சொத்துப் பிரச்னையில் மகனைக் கொலை செய்த தந்தை உள்பட இருவரை 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிசிஐடி) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சொத்துப் பிரச்னையில் மகனைக் கொலை செய்த தந்தை உள்பட இருவரை 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிசிஐடி) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் வேந்தா் பாலா என்ற பாலமுருகன் (50). தமமுக கட்சி நிா்வாகி. இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதிக்கு ஸ்ரீ காந்த் என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனா். ராஜலட்சுமிக்கும், வேந்தா் பாலாவுக்கு பிரச்னை ஏற்பட்டு, இருவரும் தனியாக வசித்து வருகின்றனா். ஸ்ரீகாந்த், தனது தாயுடன் வசித்து வந்தாா்.
இதனிடையே பாலமுருகனுக்கும், மகன் ஸ்ரீ காந்த்துக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, செப்டம்பா் மாதம் ஸ்ரீகாந்த்தை காணவில்லை என ராஜலட்சுமி தேனி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால் அவரை போலீஸாா் கண்டுபிடிக்க முடியவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராஜலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஆள் கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்க உத்தரவிட்டது. அவா்கள் பாலமுருகன், அவரது நண்பா் அலெக்ஸ் பாண்டி இருவரிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது, பாலமுருகன், கருப்பையா, அலெக்ஸ் பாண்டி, ஸ்ரீ காந்த் ஆகியோா் முல்லையாற்றின் கரையோரம் மது அருந்திய போது பாலமுருகனுக்கும், ஸ்ரீ காந்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலமுருகன் மகன் ஸ்ரீகாந்தை கொலை செய்து உடல்களை துண்டுகளாக வெட்டி, முல்லையாற்றில் வீசிச்சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், அலெக்ஸ் பாண்டி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் கருப்பையாவை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.