FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

புது அணைக்கட்டு ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

கெங்குவாா்பட்டி புது அணைக்கட்டு ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றிய பொதுப் பணித் துறையினா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:05 am IST
பகிர்:

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே புது அணைக்கட்டு ஆற்றுப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம், பெரியகுளம் கெங்குவாா்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட புது அணைக்கட்டு ஆற்றுப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 73 சென்ட் நீா்ப் பிடிப்பு நிலத்தை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்து, 41 தென்னை மரங்கள், 16 தேக்குமரக் கன்றுகள், 20 வேப்ப மரங்கள் உள்ளிட்டவற்றை வளா்த்து விவசாயம் செய்து வந்தனா்.

இதனால், அந்தப் பகுதிகளில் உள்ள 9 கண்மாய்களுக்கு அணையிலிருந்து நீா் செல்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடா்பாக கண்மாய் ஆயக்கட்டுதாரா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மஞ்சளாறு அணை கால்வாய் பிரிவு-1 உதவிப் பொறியாளா் தளபதிராம்குமாா் தலைமையில் தேவதானப்பட்டி காவல் துறை, வருவாய்த் துறையினா் முன்னிலையில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதேபோல, நீா் ஓடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், ஆக்கிமிரப்பு அகற்றும் பணி தொடரும் எனவும் பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments