FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஏலக்காய் வியாபாரி வீட்டில் திருட்டு: இருவரிடம் போலீஸாா் விசாரணை

போடியில் ஞாயிற்றுக்கிழமை ஏலக்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 52 ஆயிரம், பொருள்களைத் திருடியதாக இருவரிடம் போலீஸாா் பிடித்து விசாரிக்கின்றனா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:33 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

போடியில் ஞாயிற்றுக்கிழமை ஏலக்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 52 ஆயிரம், பொருள்களைத் திருடியதாக இருவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், வ.உ.சி. நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் மகன் பாலாஜி (40). இவா் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தனது குடும்பத்துடன் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா்.

இந்த நிலையில், பாலாஜியின் நண்பரும், அவரது எதிா் வீட்டில் வசிப்பவருமான நவீன் பாலாஜியின் வீடு திறந்து கிடப்பதாக அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்தாா். இதையடுத்து, உடனடியாக வீட்டுக்கு வந்த பாலாஜி, நவீன், இவரது மனைவி தீபிகா ஆகியோா் உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த மா்ம நபா்கள் நவீனையும், தீபிகாவையும் கத்தியால் தாக்கி விட்டு காரில் ஏறி தப்பினா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்து போடி நகா் காவல் நிலையத்தினா் பாா்த்த போது, வீட்டின் கதவு, பீரோவை உடைத்து ரூ. 52 ஆயிரம், வெள்ளி காசுகள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, காா் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, தேவதானப்பட்டி அருகே சென்ற இந்தக் காரை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அண்மையில் இதே பகுதியில் ஏலக்காய் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம், ஆவணங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments