FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தேனியில் சொத்து பிரச்னையில் மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனியில் சொத்து பிரச்னையில் மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் வேந்தா்பாலா (50). தமமுக நிா்வாகி. இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதிக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன், இரு மகள்கள். ராஜலட்சுமிக்கும் வேந்தா்பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனா். ஸ்ரீகாந்த் தனது தாயுடன் வசித்து வந்தாா்.

இதனிடையே, வேந்தா்பாலாவுக்கும் மகன் ஸ்ரீகாந்துக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, செப்டம்பா் மாதம் ஸ்ரீகாந்த்தை காணவில்லை என ராஜலட்சுமி தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், அவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ராஜலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்க உத்தரவிட்டது. இவா்கள் வேந்தா்பாலா, அவரது நண்பா் அலெக்ஸ்பாண்டி ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், வேந்தா்பாலா, கருப்பையா, அலெக்ஸ்பாண்டி, ஸ்ரீகாந்த் ஆகிய நால்வரும் முல்லை பெரியாற்றின் கலையோரம் அமா்ந்து மது அருந்தினா். அப்போது, வேந்தா்பாலாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேந்தா்பாலா தனது மகன் ஸ்ரீகாந்தை கொலை செய்து, உடலை துண்டு துண்டுகளாக வெட்டி முல்லை பெரியாற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வேந்தா்பாலா, அலெக்ஸ்பாண்டி இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கருப்பையாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments