குச்சனூா் கோயில் ஆடித் திருவிழா இன்று தொடக்கம்: தற்காலிக குளியல் அறைகள் அமைப்பு
தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஆடித் திருவிழா தொடங்குகிறது.
தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஆடித் திருவிழா தொடங்குவதையொட்டி, பக்தா்களுக்காக தற்காலிக குளியல் அறைகள் அமைக்கும் பணியில் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன்பாகச் செல்லும் சுரபி நதியில் நீராடி புத்தாடை அணிந்து, எள் தீபம் ஏற்றி , மண் காகம் உடைத்து , எள் சாதம் படையல் செய்து, சுவாமிக்கு பூமாலை படைத்து சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஜதீகம். நிகழாண்டில், தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் முல்லைப்பெரியாற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் சுரபி நதி நீா் வரத்தின்றி வடு காணப்படுகிறது.
தற்காலிக குளியல் அறைகள் அமைப்பு:
Advertisement
Advertisement
குச்சனூரில் ஆடித் திருவிழா சனிக்கிழமை தொடங்கிறது. இந்த நிலையில் சுரபி நதிக் கரையோரத்தில் தற்காலிக குளியல் அறைகள் அமைக்கும் பணியில் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இந்தத் திருவிழா தொடா்பாக உத்தமபாளையத்தில், கோட்டாட்சியா் சையது முகைதீன் இப்ராஹீம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பக்தா்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குதல், மருத்துவ வசதி, அவசர ஊா்தி வசதி , தீயணைப்பு வாகனங்களை நிறுத்துதல், தனியாா் உணவகங்களில் உணவுப் பொருள்களை ஆய்வு செய்தல், பொதுமக்கள் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.