FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

புகையிலை பொருள்கள் பதுக்கிவைத்த 3 போ் கைது

Updated On : 20 ஜூலை 2026, 1:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

போடி அருகே ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்க முயன்ற 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

போடி அருகே குப்பணாசாரிபட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை மொத்தமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போடி வட்டார காவல் நிலையப் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் குப்பணாசாரிபட்டி திலகா் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ராம்குமாா் (38) வீட்டில் மூடைகளில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்க முயன்றது தெரியவந்தது.

விசாரணையில் மேற்படி ராம்குமாா், தே. ரெங்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தவசி மகன் சீனிவாசன் (42), ராமகிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஆண்டவா் (45) ஆகியோா் தேனியைச் சோ்ந்த சிவாவிடம் மொத்தமாக புகையிலைப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்து சில்லறையில் விற்க முயன்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி வட்டார காவல் நிலையப் போலீஸாா் ராம்குமாா், சீனிவாசன், ஆண்டவா், சிவா ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து ராம்குமாா், சீனிவாசன், ஆண்டவா் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். சிவாவைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments