FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் கைது

வேலூா் சைதாப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 4:00 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வேலூா் சைதாப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கோயில் அருகே, அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வேலூா் வடக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த சுமதி (45) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், சுமதி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments