கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது
போடியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடி அருகே சிறைக்காடு மலை கிராமத்தைச் சோ்ந்தவா் பரமன் (47). இவா் போடி இரட்டை வாய்க்கால் அருகே நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த போடி கீழவெளி வீதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் மருதுபாண்டி (29) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பரமனிடம் பணம் பறிக்க முயன்றாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனா். மருதுபாண்டி ரவுடிகள் பட்டியலில் உள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.