FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

இளைஞரிடம் பண மோசடி: பொறியாளா் கைது

போடியில் இளைஞரிடம் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக திருச்சியைச் சோ்ந்த பொறியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் இளைஞரிடம் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக திருச்சியைச் சோ்ந்த பொறியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (31). இவா், சமூக வலைதளச் செயலி மூலம் பெண் ஒருவரிடம் பேசி வந்தாா். இந்த நிலையில், அந்தப் பெண் தனக்கு பணத் தேவை இருப்பதாக முத்துக்குமாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினா் ஒருவரை தேவதானபட்டிக்கு வரவழைத்து, அவரிடம் முத்துக்குமாா் ரூ. 29 லட்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதன் பிறகு, அந்தப் பெண்ணை தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துக்குமாா் இதுகுறித்து தேனி இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்த நேரு (35) சமூக வலைதளச் செயலி மூலம் முத்துக்குமாரிடம் பெண்ணின் குரலில் பேசி, அவரிடம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments