FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சின்னமனூா் பாசனக் கால்வாயில் நெகிழிக் கழிவுகள் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

சின்னமனூரில் விவசாயப் பாசனத்துக்கு செல்லும் கால்வாய்க் கரையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நெகிழிக் கழிவுகளை அகற்றி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:35 am IST
சின்னமனூரில் உள்ள பாசனக் கால்வாய்க் கரையை ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெகிழிக் கழிவுகள்.
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் விவசாயப் பாசனத்துக்கு செல்லும் கால்வாய்க் கரையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நெகிழிக் கழிவுகளை அகற்றி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

சின்னமனூா், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு பாசன நீா் செல்லும் பிரதான கால்வாய் சின்னமனூா் பெருமாள் கோயில் வழியாக செல்கிறது. இந்தக் கால்வாய் தண்ணீா் உடையகுளம், செங்குளங்களில் தேக்கப்பட்டு விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால், தற்போது மழைப் பொழிவு இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட வில்லை.

இதனால், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெரும்பாலான கால்வாய்கள் வடு விட்டன. இதேபோல, சின்னமனூரில் உள்ள பாசனநீா் செல்லும் கால்வாயும் வடது. இதையடுத்து, இந்த கால்வாய்க் கரை அதிக ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டது. இதில், சிலா் பழைய நெகிழிக் கழிவுகளை குவிந்து வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும் கால்வாயிலும் நெகிழிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பாசனக் கால்வாய் மாசடைந்து வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். எனவே, உத்தமபாளையம் நீா் வளத் துறையினா் பாசனக் கால்வாய்க் கரைகளில் குவித்து வைக்கப்பட்ட நெகிழிக் கழிவுகளை அகற்றி ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments