FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தோட்டங்களில் சூரிய மின்வேலி: விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம், கே.ஜி. பட்டி பகுதியில் தோட்டங்களில் சூரிய மின்வேலி அமைக்க வனத் துறை அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:42 am IST
தேனி மேகமலை வனக்கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் பேசிய தேனி மாவட்ட வன அலுவலா் கிரன். உடன் மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் யாதவ் .
பகிர்:

தேனி மாவட்டம், கே.ஜி. பட்டி பகுதியில் தோட்டங்களில் சூரிய மின்வேலி அமைக்க வனத் துறை அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மேகமலை வனக்கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக, மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் யாதவ் தலைமை வகித்தாா். தேனி மாவட்ட வன அலுவலா் கிரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

Advertisement

Advertisement

தும்மக்குண்டு மலைராஜ்: மேகமலை வனப் பகுதியில் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். தற்போது, தில்லி உச்சநீதிமன்றம் மேகமலையில் உள்ள விவசாயிகளை வெளியேற்ற உத்தரவிட்டது. எனவே, இந்த பகுதி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும்.

கே.ஜி. பட்டி ஜானகி: கே.ஜி.பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே, இந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களில் சூரிய மின் வேலி அமைக்க அனுமதி வழங்கக் கோரி, வனத் துறையிடம் பல மாதங்களுக்கு முன்பு மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் யாதவ்: மேகமலை வனப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது ஆவணங்களை வழங்கினால், அதை விசாரித்து வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்குவோம். கே.ஜி. பட்டி பகுதியில் உள்ள மின்வேலி அமைப்பது குறித்து மனுக்களை விசாரித்து அனுமதி வழங்குகிறோம் என்றாா் .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments