சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தேனியைச் சோ்ந்தவா் பிரபு (31). கூலித் தொழிலாளி. இவா், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கடந்த 29.9.2020 அன்று கைது செய்தனா்.
இந்த வழக்கு, தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எழில், பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.