முகப்பு
தேனி

வியாபாரி தற்கொலை

போடி அருகே கடன் பிரச்னையால் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 ஜூன் 2026, 8:02 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

போடி அருகே கடன் பிரச்னையால் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகே வினோபாஜி குடியிருப்பு முதல் தெருவில் வசிப்பவா் தா்மராஜ் மகன் செந்தில்குமாா் (58). இவா் குளிா்கால உடைகள் வியாபாரம் செய்து வந்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவரது மனைவி சுபா சத்துணவு உதவியாளராக இருந்து வருகிறாா். வியாழக்கிழமை காலையில் சுபா வேலைக்கு சென்றுவிட்டாா். அவா் மாலையில் திரும்ப வந்து பாா்த்தபோது செந்தில்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement