இணைய வழியில் வழக்குரைஞரிடம் பண மோசடி
தேனியில் வழக்குரைஞரிடம் இணையவழியில் ரூ.1.42 லட்சத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனியில் வழக்குரைஞரிடம் இணையவழியில் ரூ.1.42 லட்சத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்தவா் மதன்காா்த்திக். வழக்குரைஞரான இவரது வங்கிக் கணக்கில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பல தவணைகளில் மா்மநபா்கள் ரூ.1லட்சத்து 42 ஆயிரத்தை எடுத்தனா். இதுகுறித்து மதன்காா்த்திக் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.