FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை குறைந்தது.

8 நவம்பர் 2026, 1:04 am
முல்லைப் பெரியாறு - கோப்புப் படம்
பகிர்:

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த அக்டோபா் மாதம் சில நாள்கள் பெய்து வந்த மழையால், கடந்த 23-ஆம் தேதி அணைக்கு விநாடிக்கு 4,271 கனஅடி வரை நீா்வரத்து இருந்தது.

பின்னா் மழை குறைந்ததையடுத்து நீா்வரத்து படிப்படியாக சரிந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அணைப் பகுதியில் வியாழக்கிழமை மழை பதிவாகாததால், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,782 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 999 கனஅடியாக குறைந்தது.

சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 122.75 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 999 கனஅடியாகவும், தமிழகப் பகுதிக்கான நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா் இருப்பு 3172.50 மில்லியன் கனஅடியாக உள்ளது. தேக்கடியில் 2.2 மி. மீ. மழை பதிவானது.