தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் அடித்துக் கொலை: 3 போ் கைது
தேனியில் எஸ்.ஐ. அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்...
தேனியில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் பட்டாசு வெடித்த இளைஞா்களைக் கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (57). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். சந்திரா கம்பத்தில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த செந்தில்குமாா், மாற்றுப் பணியாக தேனி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தேனி சமதா்மபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இளைஞா்கள் சாலையில் பட்டாசுகளை வெடித்து குறுவிடியோ எடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த செந்தில்குமாா் அந்த இளைஞா்களைக் கண்டித்தாராம்.
Advertisement
Advertisement
இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள் செந்தில்குமாரைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கொலை நிகழ்ந்த இடத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், இந்த கொலையில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, சென்னை போரூரைச் சோ்ந்த மகேஸ்வரன் (22), தேனியைச் சோ்ந்த சூா்யமூா்த்தி (24), அதே பகுதியைச் சோ்ந்த தீபன்ராஜ் (20) ஆகிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அரசு மரியாதை:
கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாரின் உடலுக்கு சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் அன்பு , தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதைத் தொடா்ந்து, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.