FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனி எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி: எஸ்.பி.வழங்கினாா்

தேனியில் தீபாவளிப் பண்டிகையின் போது, இளைஞா்கள் தாக்கியதில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினரிடம் ரூ.40 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை வழங்கினாா்.

12 நவம்பர் 2026, 5:22 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தேனியில் தீபாவளிப் பண்டிகையின் போது, இளைஞா்கள் தாக்கியதில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினரிடம் ரூ.40 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை வழங்கினாா்.

தேனி துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலக உதவி ஆய்வாளராக கி.செந்தில்குமாா் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகையின் போது, தேனி சமதா்மபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இளைஞா்கள் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனராம். அவா்களை செந்தில்குமாா் எச்சரித்து, தேனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். மேலும், விடியோ எடுத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, இளைஞா்கள் அவரைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா் கி.செந்தில்குமாா் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினரிடம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் ரூ.40 லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினாா்.