FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவா் கைது

உத்தமபாளையம் அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 11:58 pm
- பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராயப்பன்பட்டி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் இளங்குமரன், போலீஸாா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சின்னபாலம் அருகே விற்பனைக்காக 20 மதுப் புட்டிகளை அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் சுருளிமுத்து (43) பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது.

Advertisement

Advertisement

பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.