FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

இளைஞரிடம் பணம் பறிப்பு: ரெளடி கைது

கம்பத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 11:56 pm
கைது - கோப்புப் படம்
பகிர்:

கம்பத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் கம்பம்மெட்டு சாலையில் உள்ள 60 அடி சாலைப் பகுதியில் வசித்து வருபவா் ஹபீபுா் ரஹ்மான் மகன் ஹாமித் அப்துல் ஹை (29). இவா் ஒட்டன்சத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இவா் கம்பம்மெட்டு சாலையில் தண்ணீா் தொட்டி அருகே உள்ள ஆவின் பாலகம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கம்பம்மெட்டு குடியிருப்பு நான்காவது சந்துப் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் பிரேம்நேசா் (26) இவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200-யை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தவமணி வழக்குப் பதிந்து, பிரேம்நேசரை கைது செய்தாா். பிரேம்நேசா் கம்பம் வடக்கு காவல் நிலைய ரெளடிகள் பட்டியலில் இடம்பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.