FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: தேனியில் 36 போ் மீது வழக்கு

தேனி மாவட்டத்தில் காவலா்கள் ‘ட்ரோன்’ பறக்க விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 36 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

14 நவம்பர் 2026, 11:29 pm
டிரோன்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் காவலா்கள் ‘ட்ரோன்’ பறக்க விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 36 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேனி நகரில் பல்வேறு பகுதிகளில் சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவது, பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை ‘ட்ரோன்’ பறக்கவிட்டு கண்காணித்தனா்.

அப்போது, பொது இடத்தில் மது அருந்திய மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பொது இடங்களில் மது அருந்தியது, விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டியதாக 36 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தேனி மாவட்டத்தில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணித்து மது அருந்துவது, விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.