FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவா் கைது

45 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மீனாட்சிபுரத்தில் இளங்கோவன் (52), வீரன் (42) ஆகியோா் தனித்தனியே மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 30 மதுப்புட்டிகளையும், ரூ.900- ஐயும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement