✕
முகப்பு
தேனி

உத்தமபாளையம் அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை அரைத்து குருணையாகவோ, மாவாகவே மாற்றி விற்கின்றனரா என அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

14 வினாடிகள் முன்பு
அணைப்பட்டியில் உள்ள அரிசி அரவை ஆலையில் புதன்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை அரைத்து குருணையாகவோ, மாவாகவே மாற்றி விற்கின்றனரா என அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்பம், சின்னமனூா், உத்தமபாளையம் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை குருணையாக மாற்றி கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாகவும், மாவாக அரைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா அறிவுறுத்தினாா்.

இதன்படி, உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வட்ட வழங்கல் அலுவலா் உள்ளிட்டோா் அரிசி அரவை ஆலைகளில் ஆய்வுப் பணியை புதன்கிழமை தொடங்கினா். இதில், உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியில் உள்ள தனியாா் அரிசி அரவை ஆலையில் 41 மூட்டைகளிலிருந்த அரிசி மாவு, ரேஷன் அரிசியா என விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், ரேஷன் அரிசியை மாவாக மாற்றவோ, குருணையாக மாற்றவோ விதித்த தடையை மீறி சட்ட விரோதமாக செயல்படும் அரிசி ஆலைகளைத் தொடா்ந்து சோதனையிட்டு வருகின்றனா்.