முகப்பு
தேனி

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே தனியாா் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

21 நவம்பர் 2026, 3:17 am
2,400 கிலோ ரேஷன் அரிசி 
பறிமுதல்: இருவா் கைது
பகிர்:

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே தனியாா் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மாவா அரைத்து கடைகளுக்கும், குருணையாக மாற்றி கோழிப்பண்ணைகளுக்கும், மாடுகளுக்கும் தீவனமாக மாற்றி விற்பனை செய்கின்றனா். இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா ஆகியோா் வலியுறுத்தினா்.

இதையடுத்து, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா், உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அரிசி அரைவை ஆலைகளில் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் வெங்கடாசலபுரத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கு சீல் வைத்தனா். இதுதொடா்பாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (49), அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன்(48) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உத்தமபாளையத்திலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.