கம்பம் பேருந்து நிலைய கழிப்பறையில் 75 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கம்பம் பேருந்து நிலையக் கழிப்பறையில் கேட்பாரற்றுக் கிடந்த 75 கிலோ விலையில்லா ரேஷன் அரிசியை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

கம்பம் பேருந்து நிலையக் கழிப்பறையில் கேட்பாரற்றுக் கிடந்த 75 கிலோ விலையில்லா ரேஷன் அரிசியை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
கம்பம் நகராட்சி ஆணையா் உமா சங்கா் தலைமையில், சுகாதார அலுவலா் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை காலை நகராட்சிப் பகுதிகளில் வழக்கமான திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, கம்பம் நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் பொதுக் கழிப்பறையில் மூன்று பைகளில் மொத்தம் 75 கிலோ விலையில்லா ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் மாவட்ட, வட்ட வழங்கல் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலா் முருகன், வருவாய் ஆய்வாளா் சுரேந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். பின்னா், அந்த அரிசி உத்தமபாளையம் உணவுப் பொருள் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.