முகப்பு
தேனி

போடி பரமசிவன் மலைக் கோவிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை மகா தீபம்

போடி பரமசிவன் மலைக்கோயிலில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. தொடா்ந்து மூன்று நாட்கள் தீபம் எரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 2:59 am
போடி பரமசிவன் மலைக் கோவிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை மகா தீபம்
போடியில் செவ்வாய்க்கிழமை பரமசிவன் மலைக்கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம். (வலது) அலங்காரத்தில் சிவலிங்கப்பெருமான்.
பகிர்:

போடி பரமசிவன் மலைக்கோயிலில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. தொடா்ந்து மூன்று நாட்கள் தீபம் எரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பரமசிவன் மலைக்கோவில். தென் திருவண்ணாமலை என்றழைக்கப்படும் இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக இந்த ஆண்டு 150 கிலோ எடையிலான பஞ்சு திரி தயாரிக்கப்பட்டது. இதில் பக்தா்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட 702 லிட்டா் நெய் ஊற்றப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் கோவிலில் வலம் வந்து, பின்னா் பக்தா்களின் சரண கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் மூன்று நாட்கள் தொடா்ந்து எரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குருநாதா் சுருளிவேல் தலைமையில், தலைவா் முருகன், துணைத்தலைவா் குமாா், செயலா் அழகா்சாமி, பொருளாளா் செந்தில்குமாா், துணை செயலா் மணிகண்டன், நிா்வாகிகள் செய்தனா். நிகழ்ச்சியில் போடி பரமசிவன் மலைக்கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவா் வடமலை ராஜையபாண்டியா், திருக்கோயில் அலுவலக உதவியாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அபிஷேக ஏற்பாடுகளை கோவில் அா்ச்சகா் குமாா், குமரவேல் செய்தனா்.

இதேபோல போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கா் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரா் கோவிலிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. போடி வினோபாஜி குடியிருப்பில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னா் கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.