குடும்பத் தகராறில் மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு
கூடலூரில் புதன்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கணவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

கூடலூரில் புதன்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கணவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.
தேனி மாவட்டம், கூடலூா் கோட்டை கருப்புசாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் சிங்கத்துரை (40). இவரது மனைவி பிரியங்கா (35). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப விசேஷத்துக்காகப் பெற்ற மொய் பணத்தை சிங்கத்துரை தனியாக வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், கணவா், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து, ஒரே வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனா்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை காஞ்சி மரத்துறையில் வேலையாள்களுக்கான ஊதியக் கணக்கை முடிக்கச் சென்ற பிரியங்கா, இரவு தாமதமாக வீட்டுக்குத் திரும்பினாா். இதனால், தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியங்காவை வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சிங்கத்துரையைத் தேடி வருகின்றனா்.